கவர்ச்சி ஆடை அணியும் பெண்கள்,ரௌடிகள் கைகள் வெட்டப்படும்:யாழில் பீதியை கிளப்பும் புதிய இயக்கம்!

த்தியகிழக்கு நாடுகளில் கடும் தண்டனைகளின் மூலம் புகழ்பெற்ற ஐ.எஸ் இயக்கத்தின் பாணியிலான இயக்கமொன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரௌடித்தனம், புகைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் செய்யும் வாலிபர்கள் மற்றும் குட்டையான கவர்ச்சியான ஆடைகள் அணியும் பெண்களின் கைகளை வெட்டவுள்ளதாக எச்சரிக்கைவிட்டு அனாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் பல இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.

யாழ்க்குடாவில் ரௌடித்தனங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய குற்றங்களிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகள் எல்லைமீறி சென்றால் எப்படியான தண்டனைகள் வழங்கப்படும் என அதில் விபரிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் பொதுமக்களிற்கு இடையூறு விளைவித்தல், வால்வெட்டில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களிற்கு கை துண்டிக்கப்படும் என்றும் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திகளில் மூன்றுபேருக்கு மேல் கூடி நின்றால், பொது இடத்தில் கும்பலாக சிகரெட் புகைத்தால் தண்டனை வழங்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெண்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.ஓ என்ற அமைப்பு அதற்கு உரிமை கோரியுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -