ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் காத்தான்குடியில் வெற்றிவாகை சூடிக் கொண்டது!

ஏ.எல்.டீன்பைரூஸ்-

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு இடம் பெற்ற மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி (01.05.2015 வெள்ளி) மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது இதில் ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடிக் கொண்டது.

காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் மே தினத்தில் மோதின இதில் 4ஃ0 என்ற கோல்கணக்கில் ஏறாவர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

தேசிய பாடசாலையின் கெப்டன் யு.எல்.எம்.முபாறக் தலைமையில் இடம் பெற்ற இக்கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி கலந்து கொண்டார்.

அதிதிகளாக முன்னால் அரச அதிபர் ஜனைதா சரீப்,மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆதம்லெப்பை,காத்தான்குடி கால் பந்தாட்ட லீக்கின் உப தலைவர் என்.எம்.ஸாஹிர் உப்பட பாடசாலைகளின் விளையாட்டு ஆசிரியர்கள்,கழகங்களுடைய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மிக நீண்ட நாட்களின் பின்னர் பல்லாயிரக்கணக்கான உதை பந்தாட்ட ரசிகர்கள் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் மேற்படி கால்பந்தாட்ட போட்டியினை கான வந்திருந்ததினை காணக் கூடியதாக இருந்தது.

போட்டியின் போது வெற்றி பெற்ற ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 10000ஃஸ்ரீ பத்தாயிரம் ரூபாய் பணத்தினை பரிசாக பெற்றுக் கொண்டது.

இடன்டாம் இடத்தினை அடைந்ந காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகம் 7000ஃஸ்ரீ; ரூபாய் பணத்தினை பரிசாக பெற்றுக் கொண்டது

மேற்படி நிகழ்வு காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி) இன் அனுசரனையுடன் இடம் பெற்றதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.ச





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -