நிந்தவூரில் இடம்பெற்ற ஜமாத்தே இஸ்லாமியின் பிரமுகர் மாநாடு!

சுலைமான் றாபி,றபீக் பிர்தௌஸ்-
லங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் "இன்றுள்ள பாடங்களும், இனியுள்ள கடமைகளும்" எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற பிரமுகர் மாநாடு நேற்றையதினம் (23) நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அமீர் ஆர். ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இப்பிரமுகர் மாநாட்டில் தெளிவுரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் நிந்தவூரில் காணப்படும் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மார்க்கப் பெரியார்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மற்றும் விளையாட்டு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து பயன் பெற்றனர். 

இதில், 

இனவாதப் புயல் தனிந்து
ஆட்சிக்கொடுமை ஒழிந்ததென்று
நீண்டதொடு பெருமூச்சு
நீண்ட இளைப்பாறுதல்

நிறுத்தி வையுங்கள் - உங்கள் 
நினைப்புக் கடுகதியி

எங்களை நாங்கள் 
மறுபார்வை செய்ய 
அளவிலா அருளாளன் 
எழுதிவைத்த பருவகாலம்

ஓய்வெடுக்க 
உலகமென்ன சுவனமா? 
இது ஒரு கருமபீடம் 
கர்மம் செய்
பணி புரி !

சான்றோர் சாதனை சுவாசி! 
இன்றைய பாடங்கள் படி 
இனியுள்ள கடமைகள் செய் 
மதிப்பெண் மறு உலகில் 
ஓய்வு சுவனத்தாயகத்தில்! 

எனும் கவி வரியுடன் அழைப்பிதல் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -