ஷாமிலா ஷெரிப் -
கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியிற்கு பிரதி அதிபராக ஜே.எம்.பத்மசிறி ஜயசூரிய (இ.அ.சே.தரம்1) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் கல்விப் போதனைகள் நடைபெறும் இப்பாடசாலையில் பிரதி அதிபரின் தேவை நீண்ட காலம் நிலவி வந்ததாகும்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இத்தகையதொரு நியமனம் பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் புதி மாற்றத்தினையும் உத்வேகத்தையும் உண்டு பண்ணும் என்பது எதிர்பார்ப்பாகும். சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு எமது பிரதி அதிபரின் சேவை உறுதுணைபயக்கும். முஸ்லிம் தமிழ், சிங்களவர், கிறிஸ்தவர் என நான்கு மதங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் கல்வி போதிக்கும் இப்பாடசாலையில் இத்தகையதொரு நியமனம் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவல்லதாகும்.
கல்லூரியின் அதிபர் என்.ரி.நசமுத்தீன் (இ.க.நி.சே), ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், குழு 80 உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெருமிதத்துடன் வரவேற்கின்றனர்.(ந)
