முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் : MCSL ஜனாதிபதிக்கு கடிதம்!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ரசியலமைப்பு சபைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள 125 முஸ்லிம் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்,எம். அமீன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையின் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும்,பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவும், சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன அமைப்புக்களைச் சேர்ந்த மேலும் மூன்று உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபைக்கு உள்வாங்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -