இர்ஸாத் ஜமால்தீன்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய ரீதியில் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று (02) பொத்துவில் பிரதேசத்தில் அ.இ.ம. காங்கிரஸினால் தையல் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இத் திறப்பு விழாவிற்கு கட்சியின் செயலாளர் ஹமீட், கி.மா.சபை உறுப்பினர் சுபையிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பின் தலைவர் அன்வர், நாவிதன் வெளி இளைஞர் பேரவைத் தலைவர் சித்தீக் நதீர் மற்றும் தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவியர்களுக்கு பயிற்சியின் இறுதியில் தையல் இயந்திரம் இலவசமாக கொடுக்கப்படும் என்பது விஷேட அம்சமாகும்.(ந)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)