22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு!

நேபாள நிலநடுக்கத்தில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி, 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பக்தபூர் பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோரைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர் அவர்களை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு முகாம் ஒன்றில் கண்டுபிடித்தனர்.

தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது குறித்து பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டான். இந்த உலகிலேயே நாங்கள்தான் மகிழ்ச்சியான தம்பதிகள். ஆனால் எம்மால் இதனை இன்னும் நம்ப முடியவில்லை என்றனர்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று ( ஏப்ரல் 25) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 6,300 பேர் பலியாகியுள்ளதாகவும், 2 இலட்சத்து 50,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.(ந)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -