நிஸ்மி-
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் குடும்ப மகாநாடு இன்று (02.05.2015) சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9.00 மணிவரை அக்கரைப்பற்று பட்டினப் பள்ளி வாசலில் நடைபெறவுள்ளது.
இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும் என்ற தொனிப் பொருளில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் இக் குடும்ப மகாநாட்டில் கலந்து கொண்டு நாட்டுக்கும் சமூகத்திற்கும் பங்களிக்கும் கடமைகளைப் புரிந்து பயன் பெற குடும்பத்துடன் வருமாறு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றம் அனைவரையும் அழைக்கின்றது.பெண்களுக்கென பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.(ந)
