மே தினமும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் 22வது சிறார்த்த தினமும்







ஏ.எஸ்.எம்.ஜாவித்-

றைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் 22வது சிறார்த்த தின நிகழ்வு அவரின் மகனும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் கொழும்பு-12 உயர் நீதிமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள பிரேமதாஸவின் உருவச் சிலைக்கு அருகில் காலை இன்று (01) கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், கௌரவ அதிதியாக பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜெயசூரிய, ஜோன் அமரதுங்க, றோசி சேனநாயக்க, கயந்த கருணாதிலக, தலதா அத்துக் கொரல, சம்பிக்க பிரேமதாஸ உள்ளிட்ட பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை, நகர சபை உறுப்பினர்கள், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் சமயத் தலைவர்கள் என பல பிரமுகர்களும், நாடளாவிய ரீதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களும் வருகை தந்து கலந்து கொண்டிருந்துனர்.

இதன்போது வீடமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சுமார் 800பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களும், சுயதொழில்களுக்கான கடன் உதவிகளும், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில் சுமார் 75பேருக்கு சூரிய சக்தி மின் உபகரணங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -