கிழக்கில் 20ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்வின் ஆரம்பம் ஏறாவூரில்














ட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலைக்குரிய பயிற்சி நிலையம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

ஆடை உற்பத்தி நிறுவனமான ஹமீடியாஸ் மற்றும் கிழக்கிலங்கைப் பொருளாதார அபிவிருத்திப் பேரவை ஆகியவை கூட்டிணைந்து இந்த ஆடைத்தொழிற்சாலையை இயக்கவுள்ளன.

இப்பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலையொன்றை நிறுவுவதன் மூலம் இப்பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஜுன் மாத இறுதியில் பிரமாண்டமான சர்வதேசத் தரத்திலான ஆடைத் தொழிற்சாலையாக பல ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

இவ்வருட இறுதிக்குள அம்பாரை திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் வேலயின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முதலமைச்சு தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து தொழில் நிலையங்களை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் ஹமீடியாஸ் நிறுவன அதிகாரிகள், மாகாண அமைச்சர்களான மன்சூர், துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.அப்துல் அஸீஸ், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, ஏறாவூர் நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீம் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -