தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின நிகழ்வு!

ந.குகதர்சன்-
டைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம் என்ற தொனிப் பொருளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இவ் மே தின நிகழ்வின் போது கல்லடி மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் இருந்து பேரணி ஆரம்பமாகி கல்முனை பிரதான வீதியூடாக கல்லடி உப்போடை துளசி மண்டபத்தை சென்றடைந்து.

கல்லடி துளசி மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மே தினக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் உறுப்பினர்களாக இரா.துரைரெட்ணம், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம் உட்பட கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் மே தின நிகழ்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் விசேட உரைகள் இடம்பெற்றது.

இவ் மே தின நிகழ்வானது பலத்த பாதுகாப்பு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(ந)











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -