நிஸ்மி-
கடந்த வருடம் நடைபெற்ற தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மக்கள் வங்கியின் அக்கரைப்பற்று கிளையில் சிசு உதான சிறுவர் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களாக உள்ள 05 மாணவர்களுக்கு தலா 5000.00 ரூபா பணப்பரிசு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி பாராட்டும் நிகழ்வு மக்கள் வங்கியின் அக்கரைப்பற்று கிளையில் வங்கியின் வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கிளை முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அதி கூடிய புள்ளிகள் பெற்ற வங்கி வாடிக்கையாள மாணவர்களைப் பாராட்டி உரையாற்றியதோடு, வங்கியின் வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல், பிரதி முகாமையாளர் ஏ.ஜி.நிஸாம் மற்றும் வங்கி உத்தியோகத்தர் எச்.பி.சி ராஜஹேவா ஆகியோர்களுடன் இணைந்து அதி கூடிய புள்ளிகள் பெற்ற அக்கரைப்பற்று இராம கிருஷ்ண மிஷன் மஹா வித்தியாலய மாணவர்களான தயாலன் சரண் (187), கே.சுமினிஸ் (180) அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மாணவி ஏ.எச்.அம்ஷா ஹானியா (180), அக்கரைப்பற்று இராம கிருஷ்ண மிஷன் கல்லூரி மாணவி த.தஷாந்தியா (180) பனங்காடு பாசுபதேஷ்வரா மஹா வித்தியாவய மாணவி ஜே.ரூபிதா (179) ஆகியோர்களுக்கு பரிசுக் காசோலைகளை வழங்கினார்கள்.
பரிசு பெற்ற மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்ததோடு, தங்களுக்கு பரிசுக் காசோலை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி பாராட்டியமைக்காக மாணவர்களும், பெற்றோரும் நன்றி தெரிவித்தார்கள்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)