தாதியர் சேவை தரம்-III உத்தியோகத்தர்களுக்கு கடமையாற்றும் நிலையங்களுக்கான நியமனக் கடிதம்!

றுமைஸ்-
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தாதியர் சேவை தரம் - III உத்தியோகத்தர்களுக்கு கடமையாற்றும் நிலையங்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு 06.04.2015 அன்று இடம்பெற்றது.

அண்மையில் மத்திய அரசாங்கத்தினால் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளிலிருந்து பயிற்சியை முடித்து வெளியேறிய தாதியர்கள் இலங்கை தாதியர் சேவை தரம் - III இற்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட தாதியர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் தருவிக்கப்பட்டு இருந்தனர்.

கிழக்கு மாகாணத்திற்கு தருவிக்கப்பட்டிருந்த தாதியர்களுக்கு கடமையாற்றும் நிலையங்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கும் வைபவமானது நேற்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சரின் அலுவலத்தில் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் இடம் பெற்றது.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தாதியர்களுக்கு கடமையாற்றும் நிலையங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வைபவத்தில் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தன், உதவிச் செயலாளர் ஜே.ஹுசைன்தீன், கௌரவ அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.சஹுபீர் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -