பொப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படுபவர் மைக்கல் ஜெக்சன்.
இசை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி உயிரிழந்தார்.
மைக்கல் ஜெக்சன் சந்தேகத்துக்குரிய முறையிலேயே உயிரிழந்தார். அவர் இறந்து பல வருடங்கள் கடந்த பின்னரும் அவரின் மீது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
எனினும் அவர் ஜெக்சன் உயிரோடு இருக்கும் காலத்தில் இதனை தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போதும் மைக்கல் ஜெக்சனின் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பில் பல புது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்கல் ஜெக்சன் இதுவரை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை துஷ்பிரயோக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோருக்கு, தகவல்களை மறைக்கும் பொருட்டு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சேப்சக் என்பவர் தனக்கு 9 வயதிருக்கும் போது ஜெக்சன் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை மூடி மறைப்பதற்காக தனது தந்தைக்கு மைக்கல் ஜெக்சன் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதைவிட ஜெக்சன் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் , ரகசியமான முறையில் இத்திருமணம் இடம்பெற்றதாகவும் சேப்செக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வேட் ரொப்சன் என்பவரும் மைக்கல் ஜெக்சன் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தாம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நட்ட ஈட்டைக் கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.ஜெக்சனின் சொத்து மீது இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


