ஆட்சி மாற்றத்தின் பின்பும் தனது பணிகளையும், கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் தேசிய காங்கிரஸ்!

சலீம் றமீஸ்-
நாட்டின் அரசியல் மாற்றம் ஏற்பட்டும் கூட தேசிய காங்கிரஸ் தனது பணிகளையும், கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக பொத்துவில் பிரதேசத்தில் கட்சிப் புனரமைப்பு பணிகள் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில், பொத்துவில் பிரதேசத்தில் முதலாவதாக புனரமைப்புக் கூட்டம் பொத்துவில் 05 கிராம சேவகர் பிரிவில் கிளை அமைப்பாளர் ஏ.எம்.சாஜஹான் தலைமையில் நடை பெற்றது.

இதில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டதுடன் தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் யு.எல்.உவைஸ், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -