சலீம் றமீஸ்-
ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டியது விளையாட்டு வீரர்களின் கடமையாகும் என அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரி.கே.அதிசயராச் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை ஹீரோ விளையாட்டுக் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜ் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
இக் கழத்தின் முன்னாள் தலைவருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின்மை காரணமாக அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாததையிட்டே உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய உதவி பிரதேச செயலாளர் கூறுகையில் விளையாட்டு கழகங்கள் விளையாட்டுப் போட்டிகளில் மட்டும் நின்று விடாமல் சமூகத்தில் ஒற்றுமை, நட்புறவு ஒழுக்க விழுமியங்களை கடைப் பிடிக்கும் சமூகத்தை உருவாக்கவும், சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் உங்களது கழகம் சிறப்பாக செயற்படவும் எனது பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வீ.ஈஸ்வரன், உதைப்பந்து பயிற்றுவிப்பாளர் அமீர்அலி, நிர்வாக உத்தியோகத்தர், இளைஞர் சேவை அதிகாரி நாசிப் அலி, கிராம சேவை அதிகாரி அஸ்ஹர், சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.ஐ.மாஹிர் உட்பட முக்கியஸ்தர்ளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)

.jpg)
.jpg)