நேபாளத்துக்கு உதவும் முஸ்லிம்களின் கூட்டமைப்பு உதயம்!

ஜுனைட்.எம்.பஹ்த்-
நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டிற்கு உதவி செய்யும் முகமாக, இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ”ஹெல்பிங் நேபால் ஸ்ரீலங்கன் முஸ்லிம்போரம்” என்ற பெயரில் அமைப்புக்களுக்கிடையிலான வலையமைப்பொன்றை உருவாக்கியுள்ளன.

மனிதாபிமான உதவித் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துல், இயற்கை அனர்த்தங்களின் போது முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றொரு முன்மாதிரியை காட்டுதால், சமூக அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை ஊக்கிவித்தலும், உறுதிப்படுத்தலும் போன்ற சில குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வலையமைப்பின் முதலாவது கூட்டம் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றது.

அதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU), முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா (MCSL), தேசிய சூறா சபை (NSC), ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமி (SLJI), சபாப் (AMYS), நிவாரண மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம் (SFRD), ஜமாதுஸ் சலாமா, MFCD அமைப்பு, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் (CDMF), தெஹிவளை முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனம் (DMMF), அகில இலங்கை (YMMA) பேரவை (ACYMMAC), CARING HANDS, KNOWLEDGE BOX போன்ற அமைப்புகளிலுள்ள தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன:

01.பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான அனுதாபச் செய்தியை, இலங்கையிலுள்ள நேபாளம் நாட்டின் தூதுவராலயத்தை தொடர்பு கொண்டு, கூட்டாகச் சென்று தெரிவித்து கொள்வதின் மூலம், அவர்களது சோகத்தில் இலங்கை முஸ்லிம்கள் பங்குகொள்ளுதல்.

02.ஜம்மியத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளனங்கள் உட்பட ஏனைய அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதன் மூலம் , இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு வேலைத்திட்டமாகவும் இதனை அமைத்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

03.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை தங்களால் இயன்றளவு செய்வதற்கு உதவி செய்தல். போன்ற முக்கிய தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் எட்டப்பட்டது. அதேவேளை அவசர உதவி நடவடிக்களை முன்னெடுக்கும் முகமாக தொடர்பாடல் காரியாலயம் ஒன்றும் இல : 77, தெமட்டகொடை வீதி, கொழும்பு 9 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்திற்காக, ஒவ்வொரு அமைப்புக்களும் தத்தமது சொந்த பெயர்களில் நாடுபூராகவும் பொருட்களாகவோ, பண உதவிகளையோ சேகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்களையும், பண உதவிகளையும் ” ஹெல்பிங் நேபால் – ஸ்ரீலங்கன் முஸ்லிம் போரம் ” என்ற வலையமைப்பின் ஊடாக இலங்கையில் உள்ள நேபாளம் நாட்டின் தூதுவராலயத்துக்கு வழங்கி. அவர்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டிற்கு, தேவையான உதவிகள் தொடர்பில் இலங்கையில் உள்ள நேபாளம் நாட்டின் தூதுவராலயத்தை தொடர்பு கொண்டபோது.

அவர்கள் கூடாரம், குளிர்மையிளிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான போர்வைகள், போத்தலில் அடைக்கப்பட்ட குடி நீர், முதலுதவி சாதனங்கள், அரிசி, பருப்பு, பால்மா, டின் மீன், நூட்லிஸ், போன்ற பொருட்களை வழங்குமாறு கேட்டுகொண்டனர்.

இதற்கு மேலதிகமாக, பிரதமர் காரியாலயம் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் போன்றவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வைத்தியர்களை அனுப்புதல், மற்றும் அவர்களுக்கான உதவிகளை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குவது தொடர்பிலும் நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாத சிவில் அமைப்புக்களையும் தொடர்புபடுத்தி இத்திட்டத்தை கூட்டாக முன்னெடுக்க ” ஹெல்பிங் நேபால் – ஸ்ரீலங்கன் முஸ்லிம் போரம் ” என்ற வலையமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இது தொடர்பான கூட்டங்கள் இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள :
T.L.M ஜெம்ஸித் : 0777 39 42 08
S.A. அஷ்கர் கான் : 0777 57 29 35
Hotline : 0727 88 99 66



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -