மகனையும், பேரனையும் என்னுடன் ஒப்பிட வேணடாம்!

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே. இவரது மகன் ஜோசுவா மற்றும் பேரன் ஆக்டோவியா பெளின்ட்டோ ஆகியோர் தற்போது விளையாடி வருகிறார்கள். ஜோசுவா சந்தோஷ் சப்-20 என்ற அணியிலும், ஆக்டாவியோ குரானி என்ற அணியிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்களை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் என்று பீலே கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'என் மகனையும் பேரனையும் நினைத்து நான் பெருமைப் படுகிறேன். அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவதுடன், தொடர்ந்து எனது குடும்பத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுப்பார்கள்' என்று பீலே நம்பிக்கை தெரிவித்தார். 

ஜோஸ்வா தனது தாய் மற்றும் இரட்டை பிறவிகளான சகோதரிகளுடன் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். தொடர்ச்சியான காயம் காரணமாக சந்தோஸ் இளைஞர் அணியில் விளையாடவில்லை. 

ஆக்டாவியோவுக்கு பிரேசில் குழந்தைகள் காலபந்து அணிகளில் இடம் கிடைக்காத போதிலும், இந்த சீசனில் விளையாடுவதற்காக டிபினோபோலிஸ்யின் குரானி அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணி மின்சாஸ் கெரைஸ் மாநிலத்தில் உள்ள மினெய்ரோ சாம்பியன்ஷிப்பில் ஆடுகிறது. ஆனால் ஆல்டாவியோ இதுவரை மைதானத்தில் களம் இறங்கவில்லை. 

ஆக்டாவியோ சந்த்ரா ரெஜினாவின் மகனாவார். 1966-ம் ஆண்டு பீலேவிற்கு மகளாக பிறந்த ரெஜினா, கடந்த 2006-ம் ஆண்டில் தனது 42-வது வயதில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -