எம்.ஜே.எம்.சஜீத்-
60 ஆண்டுகள் பழைமை வாந்த இந்த கிழக்கிலங்கை அரபுக்கல்லுரியானது பல ஆளுமை மிக்க உலமாக்களை உருவாக்கியுள்ளது. எதிர் வரும் காலங்களிலும் பல உலமாக்களை உருவாக்கவிருக்கின்றது. எனவே நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லா தெரிவித்தார்.
கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் பழைய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் மௌலவி ஏ.எல். இஸ்ஸத்தீன் (ஷர்கி) அவர்களின் தலைமையில் கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்குப் பழ்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், எமது பழைய மாணவர் சங்கத்தின்
உறுப்பினருமான டாக்டர் பி.எம். ஹம்தூன் (ஷர்கி), கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் அதிபர் அல் ஹாஜ் மௌலவி ஏ.எல். ரத்தீப் (பஹ்ஜி), பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். அனீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சின் இணைப்புச்செயலாளரும் முன்னாள் ஜாமிஆ நழீமிய்யா சிஷேர்ட விரிவுரையாளருமான எஸ்.எல்.எம். பழீல் (டீயு) உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)