எதிர்வரும் 28ஆம் திகதி ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதலமைச்சரும், சீட் நிறுவனமும் இணைந்து ஹமீதியாஸ் நிறுவனம் பாரம்மெடுத்துள்ள இந்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் 28ஆம் திகதி புதன் கிழமை ஆரம்ப கட்ட வேலை இடம்பெறவுள்ளது.
ஆரம்பக்கட்ட வேலை தொடர்பாக இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் சீட் அமைப்பின் அதிகாரிகளும், ஹமீதியாஸ் நிறுவன அதிகளும் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட இந்த ஆடைத்தொழிற்சாலை அரசதுறை நிரந்தர வாழ்வாதாரத்திட்டம் என்பதுடன், இதன் மூலம் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி வாழ்வாதரத்தினைப் பெருக்கும் முயற்சியாகவும் இது அமையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)