இலங்கையின் பல்துறைக் கலைஞர் கமலினி செல்வராஜன் காலமானார்!

முஹம்மட் பஹாத்-
மிழ் திரைப்படம், நாடகத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி,தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி செல்வராஜன் கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று காலமானார்.

அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதி இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் கமலினி செல்வராஜன்.

ரூபவாஹினியிலும், ஐ.ரி. என். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியும் வந்தவர். இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்த இவர். கொள்ளுப்பிட்டி சென். அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.

களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு.  கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது சில்லையூர் செல்வராசனை திருமணம் புரிந்து கொண்டார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில்
கதாநாயகியாக நடித்தார். 'ஆதர கதாவ' என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப்
பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தவர் கமலினி செல்வராஜன்.இவரது மரணம் கலைத்துறையினருக்கு பாரிய இழப்பாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -