எம்.எம்.ஜபீர்-
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஏற்பாட்டில் அம்பாறை, அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு உதைப்பந்தாட்ட துறையின் வளர்ச்சிக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் நிதியொதிக்கீட்டின் மூலம் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டுப் பொருட்கள் நேற்று முன்தினம் மாலை(05) வழங்கி வைக்கப்பட்டன.
நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடசியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உதைப்பந்தாட்ட வீரா்களுக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்து ஒவ்வொரு வீரா்களுக்கும் சீருடையை அணிவித்தார்.
இதன் போது கழகத்தின் உதைப்பந்தாடத்திற்கு பொறுப்பான அணித்தலைவர் முகம்மட அஸ்லமிடம் சீருடை, பாதாணி மற்றும் ஏனைய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாண்டு நியு ஸ்டார் கழகத்தின் வளர்ச்சிக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஒரு இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கவுள்ளதாக நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அ.இ.மு.லீக் வாலிப முன்னணிகளின் தேசிய தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை, ஓய்வு பெற்ற உட்கல்விதுறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கழக ஆலோசகர்களான அதிபர் ஏ.எல்.யாசீன்,ஆசிரியர்களான எம்.ஐ.ஹாசீம், ஏ.ஜீ.பௌஸ்,டாகடர் அகமட்லெவ்வை, கழக உபதலைவர் ஏ.சீ.அம்சூன்இமறுமலர்ச்சி சிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ் சீ.டீ.எஸ்.நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஐ.ஏ.சிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)