அகதியா பாடசாலையில் க.பொ.த.சாதாரத்தில் சித்திபெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத்-

ம்பஹா மாவட்டத்தின் அகதியா பாடசாலையின் புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவா்கள் மற்றும் இம்முறை க.பொ.த.சாதாரத்தில் 9ஏ எடுத்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு அல் ஹிலால் வித்தியலாயத்தின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வு இம் அகதிய பாடசாலையின் உப தலைவா் கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் சட்டத்தரணி றிஸ்வி மரிக்காா், செயலளாா் டொக்டா் முபாரக், மற்றும் ஹஸ்புல்லாஹ் மொலவி, மேல்மாண சபை உறுப்பிணா் ஏ.ஜே. பாயிஸ் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய அகதியா பாடசாலைகளின் அமைப்பின்“ செயலாளா் டொக்டா் முபாறக் - இந்த மாவட்டத்தில் முஸ்லீம்களது கல்வி மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு முஸ்லீம் அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பிணா்்களோ இல்லை. 

இந்த மாவட்டத்தில் முஸ்லீம்களது கல்வி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மேல்மாகாணத்திலே மிகவும் கூடுதலாக போதைப்பொருள் மற்றும் துஸப்பிரயோக வேலைகள் நடைபெறும் மாவட்டமாக கொழும்பை விட கம்பஹா மாவட்டம் முதன்மை வகிக்கின்றது. வளா்ந்து வரும் இளைஞா்கள் யுவதிகளை தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றனா். அத்துடன் முஸ்லீம் பெண்களது ஒழுக்கவீனம் துஸ்பிரயோகங்கள்“ கூடிக் கொண்டு செல்கிறது.

ஆகவே தான் கம்பஹா மாவட்ட அகதியாக சம்மேளனம் 2000 அங்கத்தவா்களை சோ்த்து ஒவ்வொரு முஸ்லீம் ஊா்களிலும் இளம் மணாவ மணாவிகளை ஒழுக்கசீலராகவும் இஸ்லாமிய அறிவு கொண்டவா்களாக அறிவுறுத்துவதற்கு இவ் இயக்கம் பாடுகடுகின்றது எனக் கூறினாா்.
 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -