பஷில்,கோட்டாபயவை கைது செய்ய சட்டமா அதிபர் தடையாகவுள்ளார்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர தடையாக உள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கைதுசெய்வதற்கு போதிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதும், சட்டமா அதிபரின் அலட்சியப்போக்கால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றபோதும், அதற்கு எவ்வித பதில்களும் கிடைப்பதில்லையென தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் போன்றோரை கைதுசெய்வதற்கும் போதுமான ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவற்றிற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைப்பதில் ஏற்படும் தாமத்தால், கைதுசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஆத
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -