எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் அமைந்துள்ள பொது மையவாடியில் உள்ளே பாதை போடப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடு என்று பொத்துவில் நான்காம் வட்டார மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மௌலவி ஏ. முகைதீன் வாவா தெரிவித்தார்.
பொது மையவாடியினை நடுவால் பிரித்து பிரதேச சபையினால் தற்பொழுத பாதை அமைக்கப்பட்டு வரும் செயலை கண்டித்து இன்று (25)ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பொழுது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஆண்டாண்டு காலமாக பொத்துவில் பொது மையவாடியில் ஜனாசாக்களை அடக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஜனாசாக்கள் அடக்கப்பட்ட இடங்களில் நடுவில் கிறவல் போட்டு பிரதேச சபை பாதையமைப்பதன் மர்மம் என்ன? எத்தனை ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளது. ஜனாசாவின் மேலால் வாகனங்கள், மனிதர்கள் நடந்து செல்லலாமா? மையவாடியில் பாதை போடும் பொழுது சிந்திக்காமல் செய்தது ஏன்? பெண்கள் மையவாடியின் உள்ளால் அமைக்கப்பட்ட பாதையினை போக்குவரத்திற்கு பயன்படுத்துவார்கள். இது இஸ்லாத்தின் பார்வையில் என்ன தீர்ப்பு என்பதை பொத்துவில் ஐம்மியத்துல் உலமா சபையினர் சிந்திக்க வில்லையா? என்பது வேதனை தரும் விடயமாகும்.
மையவாடியினை சுற்றி பாதைகள் இருக்கும் பொழுது நடுவினால் பாதை தேவையற்றது. இதனை பிரதேச சபை பெருமிதமாக கொண்டு மார்க்கச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய சபையாக மிளிர்வதுடன். இவ்வீதியினை நிறுத்தி மையவாடியின் சுற்று மதிலை பூரணமாக அமைப்பதற்கு முன்வர வேண்டும் என்றார்.(ந-த்)
