எம்.ஏ. தாஜகான்-
அக்கறைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கினங்க பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் சிறப்பான முறையில் கணித வாரம் அனுஸ்டிப்பு நிறைவு பெற்றுள்ளது. கடந்த திங்கட் கிழமை (20)அதிபர் ஏ.எல். கமறுதீன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் பல்வேறு பட்ட செயற்பாடுகளோடு நேற்று (24) வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
மாணவர்களின் கணித செயற்பாட்டை விருத்தி செய்யும் முகமாக கணிதம் சார்பான பதாதைகள்,கணிதவியலாளர்களின் படங்கள், என்பன தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கணிதத்துக்குப் பொருத்தமான கவிதை, நாடகம், பட்டிமன்றங்களும் இடம் பெற்றன.
இச்செயற்பாட்டுக்கு இணைப்பாளராக ஏ.எச் அன்வர்சாதாத் ஆசிரியர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அனைத்து கணித ஆசிரியர்களும் இசசெயற்பாட்டில் ஈடுபட்டதுடன் மாணவர்களையும் ஈடுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)