கிழக்கு மாகாண அமைச்சுக்களின் திணைக்கள ஊழியர்களை சந்தோஷப்படுத்த விளையாட்டுப்போட்டி!

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் திணைக்கள ஊழியர்களின் சந்தோஷத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று 24 கிழக்கு மாகாணசபை ஆளுனர் காரியாலயத்துக்கு முன்னாள் உள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இவ்விளையாட்டுப்போட்டியில் கிழக்கில் உள்ள மூவின மக்களும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின மக்களும் சந்தோஷத்துடன் பங்குபற்றிய முதலாவது விளையாட்டு நிகழ்வாகவும் இவ்விளையாட்டு நிகழ்வு அமைந்திருந்தன.

கலை, கலாச்சார நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளை கண்டுகளிக்க ஆளுனர் ஒஸ்றின் பெர்ணாண்டோ, முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மற்றும் உயரதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -