நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
009779851020057 என்ற இலக்கமே நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலங்கையில் இருந்து உதவிக் குழுவொன்றை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நான்கு வைத்தியர்கள், உதவியாளர்கள், மருந்துப் பொருட்கள் உள்ளடங்களாக நாளை இலங்கையில் இருந்து இவர்கள் காத்மண்டு நோக்கிப் புறப்படவுள்ளனர்.(ந-த்)
