நற்பிட்டிமுனையில் ரீ - 56 துப்பாக்கி, ரவைகள் மீட்பு!

ல்முனை - நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் சில ரவைகளும் கல்முனை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான கூட கட்டிடத்தின் மேற்கூரையை திருத்துவதற்கு இன்று சனிக்கிழமை காலை கூரைகளை பிரித்த போதே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் எஸ். சபாரத்தினம் கல்முனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ரீ 56 ரக துப்பாக்கியையும் சில ரவைகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -