அபு அலா –
'ஊழியேல் எங்கும் ஊவாத்தமிழ் எஃது' என்ற தொனிப்பொருளில் தொடர்ந்து 03 நாட்கள் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாளின் 1.2.3; அமர்வுகள் (05.04.2015) ஊவா மகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை கால்பந்தாட்ட மைதானத்தில் விழா ஆரம்பமானது.
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் வீடமைப்பு சமூர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் பீ. இராஜதுரை, முன்னால் கல்வி பிரதி அமைச்சர் சச்சிதானந்தன், முன்னால் ஊவா மாகாண சபை உருப்பினர் அரவிந்தகுமார் மற்றும் விருது பெரும் சாதனையாளர்கள் கலந்துக் கொண்டார்.
நிகழ்வில் அதிதிகள், விருது பெரும் சாதனையாளர்கள் மலர் மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டதுடன் சாகித்திய விழா கீதம் இசைத்து மங்கள விளக்கேற்றி விழா ஆரம்பமானது தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதன் போது, ஊவா மாகாணத்திற்கு கல்வி, கலை, கலாச்சார, பொருளாதாரம். மற்றும் சமூக மேம்பாட்டிற்கு சேவை செய்த 43 சாதனையாளர்கள் கௌரவிக்கபட்டனர்.
இந்த விருதுகளில் 30 மானில விருதுகள், 04 நாட்டார் காவலர் விருதுகள், 09 எலுசுடர் விருதுகள் உள்ளடங்குகின்றன. விருதுகளில் மாநில மணி விருது – புலமையாளர், கல்விப் பணிக்கானமாநில விருது, ஆக்க இலக்கியவாதிக்கான 'மாநிலமணி' விருது, புரவலருக்கான 'மாநிலமணி' விருது, ஆற்றுகை கலைப்பணிக்கான மாநிலமணி விருது, ஊடகவியலாளருக்கான 'மாநிலமணி' விருது, ஆன்மீக பணிக்கான 'மாநிலமணி' விருது, தாழிலாளர் மேம்படுத்துவோருக்கான 'மாநிலமணி' விருது, பல்துறை பணிக்கான 'மாநிலமணி' விருது, நாட்டார் கலைக் காவலர் விருது, புலமையாளருக்கான எழுசுடர் விருது, ஆக்க இலக்கியவாதி எழுசுடர் விருது, ஆற்றுகைக் கலைப்பணிக்கான 'எழுசுடர்' விருது, கல்விப்பணிக்கான 'எழுசுடர்' விருது, விளையாட்டுத்துறைக்கான 'எழுசுடர்' விருது, புலவருக்கான 'எழுசுடர்' விருது, பல்துறைப்பணிக்கான 'எழுசுடர்' விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.