அபு அலா –
அரசியல் வாழ்க்கையில் 37 வருடங்கள் நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமை புரிந்து பெரும் சேவையாற்றிய கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபெத்தியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (06) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு அம்பாறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக முன்னாள் சிரேஷ்ட அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பீ.தயாரட்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரீப் சம்சுதீன், அலிசாஹிர் மௌலானா, வீமலவீர திஸாநாயக்கா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)