வீடு வசதியற்ற 10 குடும்பங்களுக்கு பூநொச்சிமுனை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியில்லாத வறிய குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேசத்தில் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் பூர்த்தியான 10 வீடுகள் முதற்கட்டமாக அதன் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு 25-04-2015 நேற்று சனிக்கிழமை காத்தான்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வீடு வசதியில்லாத 10 குடும்பங்களுக்கு பூநொச்சிமுனை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான திறப்பை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர், பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் நிருவாகிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட ஒரு வீட்டுக்கு தலா (8) எட்டு இலட்சம் ரூபாய் செலவுடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -