அஸ்ரப் ஏ சமத்-
அடுத்த மாதம் இலங்கைக்கு வர உள்ள இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அதற்காக ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் செயலாளருடன் நேற்று மலையக அமைச்சர் திகாம்பரம், மனோ கனேசன், பிரதியமைச்சர் ராதாக் கிருஸ்னன் ஆகியோர்களுடன் நானும் இணந்து சந்தித்தோம்.
மலையக மக்களது பிரச்சினைகள் பல வற்றை இந்திய அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளோம். 2இட்சத்து 53ஆயிரம் மலைய குடும்பங்கள் தோட்டங்களிலேயே சொந்த வீடு காணியற்று இரண்டாம் தரப் பிரஜைகளாகவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இம் மக்களுக்கு அவசரமாக அவசரமாக 20ஆயிரம் வீடுகளையாவது தந்துவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்து அத்திட்த்தினை அவர்களிடம் கையளித்துள்ளோம். அதனை அவர்கள் ஏற்றுள்ள்னர். என அமைசச்ர் வேலாயுதம் தெரிவித்தார்.
இன்று செத்சிரிபாயவில் பெருந்தோட்ட அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு பெருந் தோட்ட கைத்தொழில் இராஜங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவும் கலந்து கொண்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -

இலங்கையில் யுத்த காலத்தில் தமிழகம் சென்று அங்கு வாழும் ஒர் இலட்சம் மக்கள் உள்ளனர். அவர்களில் 3500 இளைஞர் யுவதிகள் அங்கு கல்வி பயின்று அவர்கள் பட்டதாரிகளாகவும் கற்றுள்ளனர். அவர்களை அண்மையில் இந்தியா சென்றபோது சந்தித்தேன். இந்த இளைஞர்கள் யுவதிகள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பி இங்கு தமது கல்விஊடாக சேவை செய்ய காத்திருக்கின்றனர். இந்த இளைஞர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் அவர்களுக்கு ஆசிரிய தொழில் வழங்க அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தமக்கென செந்தமான காணித்துண்டு இல்லாத நிலையிலவ் உள்ள சகல மலையக குடும்பங்களுக்கும் 7 போச் காணி ஏப்ரல் 6ஆம் திகதி வழங்கப்படுகின்றது. இந்தக் காணியின் உரிமைகளுடன் அவர்கள் ஒரு வங்கியில் கடனைப் பெறவோ அல்லது அக்காணியில் வீடொன்றைக் கட்டி வீட்டின் மேற்கூறையில் தகரம் அல்லது தட்டை ஓடு போடாமல் அதற்கு கொங்கிறீட்டு மேலும் தமது வீட்டை மேல் மாடியில் பெருப்பிப்பதற்கு வசதிகள் செய்ய முடியும்.
அத் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளோம். முன்னாள் மலைய அமைச்சரினால் மலையகத்தில் 4ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதாக சொல்லப்பட்டு அதில் இதுவரை ஒரு வீடேனும் இன்னும் நிர்மாணிக்கப்படவில்லை.
அத்துடன் வட கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிகக்படப்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணிக்க உள்ளது. அதிலும் இதுவரை 6ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடக்கில் புகையிரத திட்டத்தினை இந்திய அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் மலையகப்பகுதிக்கு வராவிட்டாலும் அவர் வட கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
வட கிழக்கிலும் கிளிநொச்சி, வுவனியா பிரதேசங்களிலும் மலையக மக்கள் ஓரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்தகாலத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் பாடு படுவோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.