புல்மோட்டை 04ம் வட்டாரம் ஜின்னா புரப்பகுதியில் அமைந்துள்ள கபீர் ஜும்மா பள்ளிவாயல் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.
அதற்கான ரூபா 640000 பெறுமதியான தரை ஓடுகள் (மாபிள்) கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களினால் இன்று 2015.03.09 காலை 10:00 மணியளவில் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
இத்தரையோடுகள் மாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித்தலைவர் யு.ரி.எம். அன்வர் அவர்களினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பள்ளி வாயல் மிகுதி கட்டுமானப் பணிகளுக்கான நிதி யுதவிகளும் பெற்றுத்தரப்படும் என அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)