ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீனோடைக்கட்டு கிளைக்குழுத் தெரிவு!

பைஷல் இஸ்மாயில் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீனோடைக்கட்டு கிளைக்குழுத் தெரிவு மீனோடைக்கட்டு கூட்ட மண்டபத்தில்  (07/03/2015) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.காதர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.கலீல், மு.காவின் உயர்பீட உறுப்பினர் யு.எல்.வாஹிட் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.பத்தாஹ் மற்றும் கட்சியின் மூத்த போராளிகளும் கலந்து கொண்டனர்.

மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் யு.எல்.வாஹிட் ஆகியோர் கிளைக்குழுவின் அங்கத்துவம் பற்றியும் அதில் இடம் பெறுகின்றவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப் பெறுதல் வேண்டும் என்பன பற்றி மிகத் தெளிவான விளக்க உரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் மீனோடைக்கட்டு பிரிவுக்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.நபீஸ்தீனிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் உரிய ஆவணங்களை கையளித்து வைத்தார்.

இதேவைளை கடந்த காலங்களில் மீனோடைக்கட்டு பிரிவில் மு.காவுக்காக தேர்தல் காலங்களில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் முகவர்களாக செயற்பட்டவர்களை இந் நிகழ்வின் போது மாகாண சபை உறுப்பினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் மு.காவின் மூத்த போராளிகளாக இருந்து காலஞ் சென்ற சஹீட் ஹாஜியார், பாலுளுன் ஆகியோர்களுக்காக விஷேட துஆப் பிரார்ததனையும் இடம் பெற்றது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -