பௌசி தலைமையில் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவுத் தலைவர்களுக்கு கூட்டம்!

அஸ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவின் நாடு முழுவதிலும் 55 க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் நகர பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இன்று அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அமைச்சரின் இல்லத்தில் கூட்டமொன்று இன்று காலை நடைபெற்றது.
 
இக் கூட்டத்தின்போது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் தற்காலிக சபையொன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. இச் சபைக்கு தலைவராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.பௌசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இணைச் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் நௌசாட் மஜீட், புத்தளம் நகர சபைத் தலைவர் கே.பாயிசும், உப தலைவராக வத்தளை நகர சபைத் தலைவர் நௌசாத், பொருளாளர்களாக அப்துல் சத்தார், மாத்தளை மாநகர சபைத் தலைவர் ஹில்மியும் தெரிவுசெய்ய்பட்டனர். 15 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு அமைப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக் கூட்டத்தில் அமைச்சர் பௌசி கருத்து தெரிவிக்கையில்:

கடந்த கால தேர்தலின் போது நாம் உச்சகட்ட நிலையில் நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெற்றிக்காக பாடுபட்டோம். ஆனால் தற்பொழுது இக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாம் எதிர்காலத்தில் பொதுத் தேர்தல், உள்ளுராட்சி தேர்தல்களின் போது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவை மீள கட்டியெழுப்பல் வேண்டும். 

அதனூடாக நாம் இக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் ஏனைய கட்சிகளை விட நாம் சக்திமிக்க ஒரு மக்கள் சக்தியாக திகழ வேண்டும் என வேண்டிக் கொண்டார். பெரும்பான்மை மக்கள் மகிந்த ராஜபக்சவை எதிர்காலத்தில் ஆதரித்தாலும் நாம் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. அவர் அவசரப்படாமல் அவருக்குரிய 2 வருடத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நமது ஸ்ரீ.ல.சுதந்திரக் கடசியின் முஸ்லீம் பிரிவு இன்னும் பலம் பொருந்தியிருக்கும். மகிந்தவின் காலம் முடிந்து விட்டது எனவும் அமைச்சர் பௌசி கருத்து தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சகல மக்கள் பிரதிநிதிகளும் தமது பிரதேச பிரச்சினைகளை முன்வைத்தனர். ஏனைய கட்சிகளான முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அதிகாரத்தைக் கொண்டது. அத்துடன் அவர்களது சக்தியைவிட எமது சக்தி இந்த ஜனாதிபதித் தேர்தலில் 90 வீதம் மைத்திரிபால சிறிசேனாவுக்கே வாக்களித்தனர். 

மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் ஒரு போதும் முஸ்லீம்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாண்மை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு எமது வாக்குகள் உண்டு அதே அந்தந்த பிரநிதிகளும் இதனையே சொல்லுகின்றனர். இந் நிலையில் நாம் சிறந்து செயல்பட்டால் புத்தளம், கொழும்பு, குருநாகல் கண்டி போன்ற பிரதேசங்கள் எமது கட்சி ஊடாக பிரநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சர் பௌசி தலைமையில் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் எனவும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -