எங்கள் இனம் பற்றி நாங்கள் பேசினால் அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய அகராதியில் அவர் தீவிரவாதி. எங்களுடைய போராட்டத்தை அழித்தவரும் அவரே´ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் தந்தை செவ்வாவிற்குப் பின்னர், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், ஒருவரை வடமாகாண சபைக்கு முதலமைச்சராகக் கொண்டு வந்திருக்கின்றோம்.
எங்களுடைய முதலமைச்சரை பார்த்துப் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு என்ன தகுதி இருக்கிறது.
உங்களிடமுள்ள பிரச்சினைகளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறீர்கள் என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்- வீடியோ இணைப்பு......
அ.த்
