எம்.ஜே.எம். முஜாஹித்-
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் ரண்விம காணி அளிப்பு உறுதி வழங்கும் வைபவம் இன்று அம்பாறை நகர மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்விஸ் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் காணி அமைச்சர் எம்.எ.டி. குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிகளை வழங்கிவைத்தார்.
அம்பாறை உகன, லகுகல, பதியத்தலாவ, தெஹியத்த கண்டி, தமன, இறக்காமம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 825 குடும்பங்களுக்கு காணி அளிப்பு உறுதி வழங்கிவைக்கபட்டன.
இந் நிகழ்வில் விவசாய, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, மாகாண சபை உறுப்பினர் சந்திரதாச கலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் 25 ஆயிரம் ஆவணங்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக அரச காணிகள் குடியிருப்போருக்கு அனுமதிப் பத்திரம் வழங்குதல், காணி உறுதி வழங்குதல், சுனாமினால் பாதிக்கப்பட்டு மின் குடிய மார்த்தப்ட்டுள்ள சுனாமி வீட்டு குடியிருப்பாளருக்கு பூரண உரிமை ஆவணம் போன்றவை வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)