தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 11வது வருடாந்த பொதுக்கூட்டம்!

பைசல் இஸ்மாயில்-
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 11வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளரும், சமூக சேவையாளருமான ஏ.எல்.மர்ஜூன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால், மிசாரி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் பணிப்பாளர் எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நுஜா அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஒருதசாப்தகால நிறைவு விழா மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு வைபவம் குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. 

அத்தோடு இப்பிராந்தியத்தில் சமூகசேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு பிரபல தொழிலதிபரும்,நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜூன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கடந்த 11 வருடங்கள் ஆற்றிய பணிகளையும், செயற்பாடுகளையும் ஒன்றியத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் மிகத் தெளிவான முறையில் விளங்கப்படுத்தினார்.

அதே போன்று கலந்து கொண்ட அதிதிகளும் உரையாற்றியதுடன் நுஜாவின் எதிர்கால செயற்பாடுகளுக்கு உதவி செய்வதாகவும் கூறினர்.

2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடகவியலாளர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளையும், செயற்பாடுகளையும் ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -