சம்மாந்துறை மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் மாதாந்தக் கூட்டம்!

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் மாதாந்த கூட்டம் அங்கத்தவர் வீ.எம்.ஜலால் அவர்களின் இல்ல வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மாஹிர் பவுன்டேசனின் தலைவர் வை.வீ.சலீம் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக மாஹிர் பவுண்டேசனின் ஸ்தாபகரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர, கௌரவ அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால போராளியுமான ஏ.எம்.ஏ.அஸீஸ், முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால போராளியுமான எம்.ரீ.எம்.இஸ்மாயில், முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால போராளி ஆசிரியர் எம்.ஐ.எம்.நியாஸ், அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனா.

இக் கூட்டத்தில் சம்மாந்துறையின் அபிவிருத்திப் பணிகள், மற்றும் அரசியல் நடவடிக்கை என்பன விசேடமாக ஆராயப்பட்டதுடன் எதிர் காலத்தில் சம்மாந்துறை பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஐ.எல்.எம். மாஹிர் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகளையும் கிராம மட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கான திட்டங்களும் நடை முறைப் படுத்துமாறு இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிதிகளினால் முன் வைக்கப்பட்டது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -