சம்மந்தனும் சுமந்திரனும் அப்பட்டமாக துவேசம் பேசினர்- மூத்த அரசியல்வாதி ஆனந்தசங்கரி!

எம்.வை.அமீர் -
மிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன விரிசலை ஏற்படுத்திய பெருமை இன்றைய தமிழ் கூட்டமைப்பையே சாரும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். கடந்த காலங்களில் மட்டுமன்றி அண்மையில் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நியமனம் வரை முஸ்லிம் சமுகம் தொடர்பான தமது உண்மையான முகத்தை இரா சம்பந்தனும், சுமந்திரனும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். 

என 2015-03-15ல் சம்மாந்துறையில் இடம் பொற்ற. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸ் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று சமாதான கற்கைகளுக்கான நிலைய காரியாலயத்தில் இடம் பெற்றது. அதன் போதே இந்த கருத்தினை ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆனந்த சங்கரி, கடந்த காலங்களில் முஸ்லிம் தலைவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலமே தமது அரசியல் பிரசன்னத்தை நிகழ்த்தியிருந்தனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியதன் விளைவுதான் இன்று இந்த நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தியது. ஒரு போதும் தழிரசுக் கட்சி ஆயுதப் போராட்டத்தினை ஆதரித்ததில்லை என்பதோடு முஸ்லிம் மக்களின் உண்மையான அபிலாசைகளுக்கு குறுக்காக இருந்ததும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்காது என்று தெளிவாக தெரிந்திருந்த போதிலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கைகளை விட்டு முஸ்லிம் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி விட்டு இன்று ஒரு முஸ்லிமை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு அவரின் மூலம் பெறப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டு காலங்கடத்துகின்றனர். விடுதலைப் புலிகளை தமது ஏகபிரதி நிதிகளாக ஏற்றுக் கொண்டு அரசியல் நடத்தும் இவர்களே வட மாகாணத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் எதிர் கொண்ட அத்தனை இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற சுய நல போக்குடைய கட்சிகளின் பேச்சினை நம்பி தங்களுக்குள் பிரிந்து விடாமல் மீண்டும் தங்களுக்கிடையே இருந்த கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தினை ஏற்படுத்த ஒன்று பட்டு உளைக்க வேண்டும் என வலியுறுத்தித் தெரிவித்தார். இந் நிகழ்வில் கல்முனை வர்த்தக சங்க தலைவர் சாபி ஹாத்திம் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -