வேன் மோதி பாடசாலை மாணவி மரணம் வேன் தீக்கரை-வீடியோ இணைப்பு!

அஹமட் இர்ஸாட்,த.நவோஜ்-
ட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏராவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட் பிரதேசமான மாவடி வேம்பு எனுமிடத்தில் அக்கறைப்பற்றிலிருந்து குருணாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் துவிச்சக்கர வண்டியுடன் பாதையை கடக்க முட்பட்ட 14வயது மதிக்கதக்க பாடசலை மாணவியுடன் மோதியதால் மாணவி பரிதாபகரமாக இஸ்தலத்திலேயே மரணமானர்.

சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயிலும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குருணாகலில் இருந்து சாரதியுடன் மேலும் ஐந்து பேர்கள் அக்கறைப்பற்றிலுள்ள தமது உறவினரின் வீட்டுக்குச் சென்று விட்டு குருணாகலுக்கு திரும்பும் வழியிலேயே இப்பரிதாபகர சம்பவம் நேற்று (08.03.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து சம்பவம் இடம் பெற்ற இடத்தை அண்டிய பிரதேச வாசிகள் குறிப்பிட்ட வேனை செல்லுத்திய சாரதியை தாக்கியுள்ளதுடன் வேனையும் முற்றாக தீக்கரையாக்கி உள்ளனர்.

மேலும் சம்பவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அதே வழியாக வந்த ஓட்டமாவடியை சேர்ந்த மற்றுமொரு வேனில், பிரயாணம் செய்தவர்கள் குறித்த வேனில் குருணாகல் நோக்கி பயணமானவர்களை பாதுகப்பு படையினரின் உதவியுடன் பாதுகப்பாக ஓட்டமாவடிக்கு அழைத்து வந்து மீண்டும் ஏராவூர் பொலீஸில் ஒப்படைத்துள்ளனர். 

சாரதியை உடனடியாக கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள ஏரவூர் பொலிஸார் படசாலையின் மாணவியின் மரணம் சம்பந்தமாகவும், வேன் தீக்கரையாக்கப்பட்டது சம்பந்தமாகவும் மேலதீக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









வீடியோ மரணம் சம்பவித்த இடத்தில் பொலிஸாருடன்:- 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -