த.நவோஜ்-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதி அங்கத்தவர்களுடனான சந்திப்பும், கருத்தரங்கும்; வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடை பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், கட்ச உறுப்பினர்கள் மற்றும் கல்குடா தொகுதி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வரலாறு மற்றும் தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இக்கருத்தரங்கில் ஆராயப்பட்டதுடன், கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)