பைஷல் இஸ்மாயில் –
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற கல்வியியலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை (08) மீலாத் நகரில் இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை கல்வி வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அதன் தலைவர் சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.றசீட் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எம்.ஹனீபா, பிரதி திட்டப் பணிப்பாளர் ஐ.எல்.தௌபிக், டாக்டர்களான எஸ்.கியாஸ், முஹம்மட் ஹம்மாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஓய்வு பெற்ற கல்வியியலாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)