இந்தியாவில் மூன்று நபர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக டில்லியில் விசாரனை!

இக்பால் அலி-
லங்கையிலிருந்து சென்று இந்தியாவில் தவ்பாப் பணியில் ஈடுபட்ட குருநாகல் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த மூன்று நபர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக இலங்கை முஸ்லிம் சமய கலாசார அமைச்சு இலங்கை வெளிவகார அமைச்சின் மூலமாக டில்லியிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் ஊடாக விளக்கங்களை பெற்றுக் கொண்டன. 

இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நபர் வைத்திய சாலையிலிருந்து டிகட் வெட்டப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபரை அங்குள்ள பொலிஸார் கைது விசாரணை நடத்திய போது அவர் ஒரு மனனோயாளி எனவும் தெரியவந்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் ஊடகப் பிரிவு செயலாளர் ரஷி ஹாசிம் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் செய்திகள் பதிவாகியிருந்தன. முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ .ஹலீம் இந்த சம்வம் தொடர்பான தகவல்களைப் பெற்று உடன் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதற்கேற்ப வெளிநாட்டு அமைச்சிரின் தூதுவராலயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டில்லுயிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் ஊடாக விளக்கங்களைப் பெற்று உடன் நடவடிக்கை மேற்கொண்டதாக எனத் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் ஊடகப் பிரிவு செயலாளர் ரஷி ஹாஷிம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்

இந்த சம்வம் இந்தியா மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போபால் பிரதேசத்தில் பள்ளியில் ளுஹர் தொழுகைக்குப் பிற்பாடு வெளியே செல்லும் போது பின்னால் வந்த ஒரு குழுவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமுற்ற இவர்களை போபால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம். எச். ஏ ஹலிமின் வேண்டு கோளுக்கிணங்கவே இலங்கை டில்லி தூதுவராலயத்திலிருந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விஜயம் செய்து அவர்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -