பாடசாலை மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் ரிசாத்!

எஸ்.எம்.அறூஸ்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பாலின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை அல்முனீரா பெண்கள் உயர்பாடசாலை மாணவர்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத், அல்முனீரா பெண்கள் உயர் பாடசாலையின் அதிபர் அப்துல் ஸலாம், பிரதி அதிபர் ஐ.எல்.எம்.பாஹிம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பாடசாலையின் தேவைகளை அறிந்து கொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து தருவதாக குறிப்பிட்டார். அத்தோடு மாணவர்கள், அதிபர், ஆசிரியர்களுக்கு சில ஏற்பாடுகளையும் அமைச்சர் செய்து கொடுத்தார்.

அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனுடாக பல்வேறு வேலைத் திட்டங்களை மேற் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -