ரணில் விக்­கி­ர­ம­சிங்க கனவு காணக்கூடாது- நிமல் சிறி­பால டி சில்வா

நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முடியும் வரை­யிலேயே தேசிய அர­சாங்கம் நடை­மு­றையில் இருக்கும். அடுத்த பொதுத்­தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல முடி­யாது என்று எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல முடி­யு­மென ரணில் விக்­கி­ர­ம­சிங்க கனவு காணக்கூடாது. பிர­தமர் கனவு இன்னும் சிறிது காலத்­திற்கே எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்­கத்­தினை முன்­னெ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ள நிலையில் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சுடன் செயற்­பட தயாரா என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய அர­சாங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர். நாம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள். எனவே இந்த மூன்று விட­யங்­களும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­ட­த­னால்தான் நாம் தேசிய அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்­தி­ருந்­தாலும் நாம் இப்­போதும் எதிர்க்­கட்­சி­யா­கவே உள்ளோம். 

எனவே ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் எமக்கு எவ்­வி­த­மான தொடர்பும் இல்லை. அதேபோல் 19ஆவது திருத்­தச்­சட்டம் உள்­ளிட்ட தேசிய அரசின் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தில் நல்ல விட­யங்­களை ஆத­ரிப்­ப­தற்கு நாம் தயார். ஆனால் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முடி­வ­டைந்த பின்னர் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டும். அதன் பின்னர் தனிக்­கட்சி அர­சாங்கம் அமையும். எனவே தேசிய அர­சாங்கம் இந்த நூறு நாட்கள் வரை மட்­டுமே வாழும்.

மேலும் பொதுத்­தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­ப­டாது. ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் தேசிய அர­சாங்­கத்தில் தம்மை தக்க வைத்­துக்­கொள்ள முடியும் என நினைக்­கின்றார். இவர்­களின் எண்ணம் நிறை­வே­றப்­போ­வ­தில்லை. 

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 23ஆம் திகதி கலைக்­கப்­ப­டு­மாயின் அதன் பின்னர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெற்றி பெற்று பாரா­ளு­மன்றில் ஆட்­சி­ய­மைக்கும். மக்­களின் ஆத­ர­வின்றி தொடர்ந்தும் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்படலாம் என கனவு காண்கின்றார். இந்த கனவு நூறு நாட்கள் முடிவடையும் வரை மட்டுமே. நூறு நாட்களின் பின்னர் பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கனவு கலையும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -