அம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளுக்கு சீருடை,கைநூல் வழங்கும் நிகழ்வு!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
ம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு சீருடையும், மாணவர்களுக்குக் கைநூல்களும்; வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையிலுள்ள அம்பாரை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்ட அஹதிய்யா சம்மேளனச் செயலாளர் எஸ்.எல்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான நூறுல் அமீன், நாசில் அஹமட், மாவட்டக் கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.பி.சுபைதீன், எம்.முப்தி உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு பேசுகையில்:

'மனிதன் குழம்பிக் கொள்கின்ற விசயங்களான மனிதன் மனிதனுடையதைப் பறித்தல், கடன் வாங்கினால் கொடுக்கக் கூடாது என்று நினைத்தல், மற்றவனுடைய காணியில் ஒரு துண்டை எடுப்போம் என்று நினைப்பதெல்லாம் தன்னுடைய பெண் பிள்ளைக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசைதான். 

இன்று மனிதன் எதிர் நோக்கும் எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் முக்கிய பிரதானமான காரணம் சீதனமாகும். இங்குள்ள உலமாக்கள், அஹதிய்யா வழிகாட்டிகள் எல்லோரும் முதலில் இந்தக் கொடிய சீதனத்தை ஒழிக்க முழு மனதுடன் முன் வரவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -