மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 இலட்சம் கடன் வழங்கும் நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வுகள் ஏப்ரல் 02,03,04ஆம் திகதிகளில் நடைபெறும்.

இந் நிகழ்வுகள் 2015 ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி மு.ப.11.30மணிக்கு களுவான்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்திலும், ஏப்ரல் 3ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் மு.ப. 09.00 மணிக்கும் ஏப்ரல் 04ஆம் திகதி மு.ப. 09.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச மண்டபத்திலும் வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியின் தலைமையில் நடைபெற உள்ளது.

இத் திட்டம் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் - நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 50,000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் வீடற்ற 500 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்க வீடமைப்புக் கடன் வழங்கப்படும். 

இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி ;அதிகார சபையின் வீட்டுரிமைப்பத்திரமும் வழங்கப்படும். இந் நிகழ்வுகளில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டுதலின் கீழ் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நாடுமுழுவதிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந் நிகழ்வுக்கு வீPடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்கள். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பிணர்களான பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், விநாயகமுர்த்தி முரலிதரன், பீ. செல்வராஜா, பீ. அரியனேந்திரன், எஸ். யோகேஸ்வரன் ஆகியோரினர்களது பங்கு பற்றுதலோடு இந் நிகழ்வுகள் நடைபெறுமென என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். பலன்சூரிய தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -