அம்ஸ்டர்டாம் நகரை தளமாகக் கொண்டியங்கும் GRI என்றழைக்கப்படும் Global Reporting Initiative (GRI) அமைப்பின்பங்குதாரர் பேரவை உறுப்பினராக நிந்தவூரைச் சேர்ந்த கிஷோர் ஹமீட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பங்குதாரர்களுக்கான (அமைப்புடன் தொடர்பு பட்டவர்களுக்கான) தேர்தலைதொடர்ந்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இப் பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது இலங்கையராக இவர்திகழ்கின்றார். GRI ஆனது நிலைபேண் தன்மை துறையில்ஒரு முன்னணி அமைப்பாக செயற்படுகின்றஅதேவேளை, நிறுவனங்கள் மிகவும் நிலைபேண்தகு தன்மை கொண்டவையாகவும் அபிவிருத்திக்கு பங்களிப்புவழங்குகின்றவையாகவும் திகழ்வதற்கான வழிமுறையாக ‘மூன்று விடயங்களிலான இறுதிமட்டஅறிக்கையிடலை’ (Triple bottom line reporting) பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் அமைப்பாகவும் தொழிற்படுகின்றது.
நிலைபேண்தன்மை, பங்குதாரர் ஈடுபாடு மற்றும் தொலைத் தொடர்பாடல் ஆகிய விடயப்பரப்புக்களில் 10வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவரான கிஷோர், இலங்கையின் மிகப் பெரிய கட்டிட நிர்மாணகூட்டு நிறுவனமான மாகா என்ஜினியரிங் நிறுவனத்தில் நிலைபேண்தன்மை மற்றும் பங்குதாரர் ஈடுபாடு பிரிவுக்குதலைமை தாங்கும் கிஷோர் ஹமீட் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் GRI அமைப்பின் பிரதிநிறைவேற்றுப் பணிப்பாளர் டெரஸா பொகல்பேர்க் கருத்துத் தெரிவிக்கையில் : இலங்கையில்இருந்து வருகின்றஎமது முதலாவது பிரதிநிதியான கிஷோர் ஹமீட்டை வரவேற்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.இப்பிராந்தியத்தில் நிலைபேண்தன்மைஅறிக்கையிடலில் சாதனைகளை முறியடித்துக்
கொண்டிருக்கின்ற இலங்கையின் புளுசிப் கம்பனிகள் பலவற்றுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைதன்னகத்தே ஒரு சொத்தாகக் கொண்டிருக்கின்றார். அத்துடன் இலங்கை முழுவதிலும் ‘மூன்று விடயங்களிலானஇறுதிமட்ட அறிக்கையிடல்’ தொடர்பில் சில பாராட்டத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்ட அறிவும் இவரிடம்இருக்கின்றது என்றார்.
நிந்தவூரை சேர்ந்த கிஷோர், கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்புகல்வியகத்திடம் இருந்து வணிக நிர்வாகத் துறையில் முதுமாணி (MBA) பட்டத்தை பெற்றவர் என்பதுடன், ஐக்கியஇராச்சியத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் பட்டப்பின் டிப்ளோமாகற்கையையும் பூர்த்தி செய்தவராவார். அதுமட்டுமன்றி, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வேர்ஜீனியபல்கலைக்கழத்தின் அரசியலுக்கான நிலையத்தின் பழைய மாணவராகவும் கிஷோர் திகழ்கின்றார். இவர், கடந்தநவம்பரில் ஜப்பானில் இடம்பெற்ற யுனெஸ்கோவின் (UNESCO) நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்விதொடர்பான மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)